×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை

நாகப்பட்டினம், மே 20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும என கலெக்டர்(பொ) பேபி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு வரும் 7ம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10- ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல் அறிய தொலைபேசி எண் 04365-250129, 04369-276060, 04366-245514 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Nagapattinam ,Collector ,P ,Baby ,Thirukkuvala ,Chempodai Government Vocational Training ,Nagapattinam District… ,
× RELATED வேளாங்கண்ணி பகுதியில் வெயில் கொடுமை...