×

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் ஓலைச் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா

கீழ்வேளூர், மே 20: நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருள ஓலைச் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வித வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஓலைச் சப்பரத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள ஓலைச் சப்பரத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேடி தேரோட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

 

The post திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் ஓலைச் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Pancha ,Olai Chapparam ,Thirkuwela Thyagaraja Swamy Temple ,Kilivelur ,Pancha murthys ,Vaikasi Brahmotsavam ,Tirukuwela Thyagaraja Swamy temple ,Nagai district ,Chitra Festival ,Tirukuwela Thiagaraja Swami Temple ,Pancha Murthys Street ,Olaich Chapparam ,Thirukuwela Thiagaraja Swami Temple ,
× RELATED காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடியில் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் தீவிரம்