×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இடைகால் அரசு பள்ளிமுதலிடம் பிடித்து சாதனை

கடையநல்லூர், மே 20:இடைகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை மொத்தம் 48 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தென்காசி மாவட்ட அளவில் இப்பள்ளி மாணவி இன்பதிவ்யா 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ஹேமந்தினி 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி பேபிகா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்கள் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரிய, ஆசிரியர்களையும் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) சங்கீதா சின்னராணி, முதன்மைகல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு ஜெசிந்தா, இடைகால் முன்னாள் ஊராட்சி தலைவரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான செல்லப்பா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இடைகால் அரசு பள்ளிமுதலிடம் பிடித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Ethikal Government School ,Kadayanallur ,Itaikal Government High School ,Tenkasi ,Athikal government school ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...