×

நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

மோகனூர், மே 20: நாமக்கல் மாவட்டம், மோகனூர் வள்ளியம்மன் கோயில் அருகேயுள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன்(30). இவர், மோகனுார் அடுத்த காட்டூரில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு 7மணியளவில், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (23), அவரது சகோதரர் சவுந்தர்யன் (20), வாங்கலையை சேர்ந்த மணி (21) மற்றும் 18வயது சிறுவன் ஆகிய 4பேரும், புற்றுக்கண் கோயில் அருகில், சாலையை மறித்தவாறு அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அதை பார்த்த லோகநாதன், ஏன் ரோட்டில் அமர்ந்து கொண்டு, சாலையில் செல்வோறு இடையூறு ஏற்படுத்தி வருகிறீர்கள் என கேட்டுள்ளார்.

பின்னர், அங்கிருந்து சென்ற லோகநாதனை, பின் தொடர்ந்து சென்ற 4பேரும், அவரை வழிமறித்து, கீழே தள்ளி, தகாத வார்த்தையில் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது விக்ரம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, ேலாகநாதனின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்க சொல்லி மிரட்டினார். அப்போது சவுந்தர்யன், டூவீலரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, லோகநாதனின் கழுத்து, கன்னத்தில் கிழித்து காயப்படுத்தினார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும், 4பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து லோகநாதனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து லோகநாதன் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, சவுந்தர்யனை போலீசார் கைது செய்து, நாமக்கல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Lokanathan ,Periyar ,Mohanur Valliamman temple ,Namakkal district ,Kattur ,Mohanuar ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது