×

திரிணாமுல் காங்.கில் சேர்ந்த பாஜ எம்.பி.

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் 42 மக்களவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே 4 கட்டங்களாக வாக்குப் பதிவு முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 24 தொகுதிகளில் 7 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து வரும் 25ம் தேதி 6ம் கட்டமாக ஜார்கிராம் உள்பட 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் ஜார்கிராம் தொகுதியில் இருந்து பாஜவை சேர்ந்த குனார் ஹெம்ப்ராம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியில் உள்ளார்.

ஆனால் தற்போதைய தேர்தலில் குனார் ஹெம்ப்ராமுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டாக்டர் பிரணாத் துடு நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு திரிணாமுல் வேட்பாளராக கலிபடா சோரன் போட்டியிடுகிறார். தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் குனார் ஹெம்ப்ராம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குனார் ஹெம்ப்ராம், ஜார்கிராம் தொகுதியில் நேற்று நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

The post திரிணாமுல் காங்.கில் சேர்ந்த பாஜ எம்.பி. appeared first on Dinakaran.

Tags : BJP ,Trinamool Congress ,Kolkata ,West Bengal ,Jhargram ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...