×

கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்

ஜோலார்பேட்டை: சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து எம்எல்ஏ மகள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். தர்மபுரியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). இவரது மனைவி அருணாதேவி(40), இவர் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜின் மகள். இவரது சகோதரர் பிரபாகரன் தம்பதிக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பார்க்க மோகன்ராஜ், அருணாதேவி, மோகன் ராஜின் தந்தை கண்ணன்(72), தாய் கிருஷ்ணவேணி(63), மற்றும் மகன் தர்ஷனேஷ்(10) ஆகிய 5 பேர் வேலூர் தனியார் மருத்துவ
மனைக்கு நேற்று காரில் சென்றனர்.

பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அடுத்த கள்ளுக்குட்டை பகுதியில் மாலை 4.20 மணியளவில் சென்றபோது திடீரென முன் டயர் வெடித்து சாலை ஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சிறுவன் தர்ஷனேஷ்க்கு எந்த காயமும் இல்லை. மற்ற 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். நாட்றம்பள்ளி போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : MLA ,Jollarpet ,Chennai-Bangalore highway ,Mohanraj ,Dharmapuri ,Aruna Devi ,Jolarpet ,MLA Devaraj ,Prabhakaran ,Vellore ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்