×

பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்: தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் டும்…டும்…

கரூர்: கடல் கடந்து காதலால் தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி திருமணம் நடந்தது. தென் கொரியாவை சேர்ந்தவர் மின்ஜூன் கிம். (28). இவருக்கு பேஸ்புக் மூலமாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற (28) என்ற இளம்பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நட்புடன் பழகி வந்தனர். ஆரம்பத்தில் நண்பர்களாகவே இவர்களது பழக்கம் இருந்தது.

தொடர்ந்து படிப்படியாக இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். விஜயலட்சுமிக்கு முதலில் இதுபற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தால் திருமணம் செய்து வைப்பார்களா என்ற தயக்கம் இருந்தது. எனினும் பெற்றோரிடம் தன் காதலை தெரிவித்துள்ளார். இதேபோன்று மின்ஜூன் கிம்மும் தன் காதலை பற்றி பெற்றோரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதன் பின்னர் விஜயலட்சுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மின்ஜூன் கிம்முடன் பெற்றோர், உறவினர்களும் தென் கொரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ் முறைப்படி மின்ஜூன் கிம் – விஜயலட்சுமிக்கு திருமணத்தை நடத்தி முடித்து உள்ளனர். பேனர் வைத்து, பத்திரிக்கை அடித்து, விருந்து வைத்து, வரவேற்பு நிகழ்ச்சி என திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தியுள்ளனர். கடல் கடந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மணமகனும், மணமகளும் கூறினர்.

The post பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்: தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் டும்…டும்… appeared first on Dinakaran.

Tags : Facebook ,Minjoon Kim ,South Korea ,Vijayalakshmi ,Karur district ,
× RELATED அமைச்சர், கலெக்டருக்கு எதிராக கருத்து...