×

தாய், மகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குட்டப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தர்மபுரி கூட்டுறவு வங்கியின் வட்டார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தான பாண்டியன்(24). சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சந்தான பாண்டியன் தனது தாய் பூங்கொடி (48) உடன் தபால் மேடு பகுதியில் உள்ள சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். தாயும் மகனும், டூவீலரில் குட்டப்பநாயக்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, பையனூர் என்ற இடத்தில் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் பஸ்சை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும், பஸ் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

பஸ் மோதிய விபத்தில், பூங்கொடிக்கு இடுப்பு எலும்பு உடைந்து படுகாயம் அடைந்தார். அதே போல், சந்தான பாண்டியனுக்கும் கை, கால் முகம் என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post தாய், மகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பஸ் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Janakraman ,Kudtappanayakanur, Krishnagiri district ,Dharmapuri Cooperative Bank ,Sandana Pandian ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்