×

ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்

பெங்களூரு: கொச்சி செல்வதற்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீப்பிடித்ததால் உடனடியாக அந்த விமானம் பெங்களூருவிலேயே தரையிறக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பெங்களூருவிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு 11.12 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கொச்சிக்கு புறப்பட்டது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் அந்த விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்துள்ளது. அது உடனடியாக கண்டறியப்பட்டதால், பெங்களூரு விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர் விமான இன்ஜினில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 179 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

The post ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Air India ,Bangalore ,Bengaluru ,Air ,India ,Kochi ,Dinakaran ,
× RELATED இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்