×

பெண் எம்பி தாக்கப்பட்ட வழக்கு; கெஜ்ரிவால் உதவியாளரை 5 நாள் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13ம் தேதி அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கடுமையாக தாக்கி எட்டி உதைத்து கன்னத்தில் பலமுறை அறைந்ததாக மாலிவால் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், பிபவ் குமாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் முன்பு ஆஜர்படுத்தினர். பிபவ் குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஒவ்வொரு 24 மணி நேரமும் பிபவ் குமாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும், காவலின் போது தினமும் அவரின் வக்கீல் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டனர்.

The post பெண் எம்பி தாக்கப்பட்ட வழக்கு; கெஜ்ரிவால் உதவியாளரை 5 நாள் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,New Delhi ,Aam Aadmi Party ,Swati Maliwal ,Delhi ,Chief Minister ,Bibhav Kumar ,
× RELATED 7 தொகுதிகளிலும் நாளை மறுநாள்...