×

தமிழகத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,AIADMK ,General Secretary ,Edappadi K. Palaniswami ,Andhra government ,Palat ,Karnataka government ,Cauvery ,Meghadatu ,
× RELATED காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி...