×

சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்களுக்கு சேவை வழங்குவதற்காக சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும்.

ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான பல சான்றிதழ்களை பொது சேவை மையம் மூலமாகவே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். எனவே மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக அடுத்த மாத இறுதியில் கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை