×

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்

ஈரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது. அந்த அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Iran ,President Ibrahim Raisi ,President ,Ibrahim Raisi ,Dinakaran ,
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த...