×

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

டெல்லி: தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான், நிகோபர் தீவுகள், மாலத்தீவு, குமரிமுனை பகுதிகளை ஒட்டிய இடங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

The post தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : South West monsoon ,Andaman ,Indian Meteorological Centre ,Delhi ,Nicobar Islands ,Maldives ,Kumarimunai ,South West ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழையால்...