×

வலங்கைமான் பகுதியில் ரூ.25 ஆயிரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

வலங்கைமான், மே 19: வலங்கைமான் பகுதியில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பைக்கில் விற்க சென்றவர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நத்தம் குடியானத் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (47). இவர் ஹரித்துவாரமங்கலம் சாலை வழியாக சந்திரசேகரபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது வலங்கைமான் தனிப்பிரிவு காவலர் அறிவழகன், ஹரிதுவாரமங்கலம் தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் அருள் தாஸ் ஆகியோர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யும் விதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்பராக் ஹான்ஸ் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை அடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கருணாகரனை கைது செய்தனர்.

The post வலங்கைமான் பகுதியில் ரூ.25 ஆயிரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Karunakaran ,Natham Kudiyanath Street ,Valangaiman, Thiruvarur district.… ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம...