×

தாளாளர் பாராட்டு மாவட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ள டிஸ்கவர் தஞ்சாவூர் சிறப்பு பயிற்சி முகாம்

தஞ்சாவூர், மே 19:தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் டிஸ்கவர் தஞ்சாவூர் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நேற்று துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாம் நேற்று முதல் 24ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. 50 மாணவ மாணவிகள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கைவினை கலைப் பொருட்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், விவசாயம், உணவு வகைகள் மற்றும் நிகழ்த்து கலைகள் குறித்து அந்தந்த துறையில் தலைசிறந்த வல்லுநர்கள் கொண்டு பயிற்சியும், களப்பயணம் மேற்கொண்டு நேரடி விளக்கமும் அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் நெற்களஞ்சியம் மட்டுமல்லாது, பல்வேறு கலைகளில் பெட்டகமாகவும், சோழர் காலம் முதல் தொன்மையான வரலாற்றை கொண்ட நகரமாகவும், தமிழகத்தில் தலைசிறந்த மாவட்டமாகவும் உலகிற்கு பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் மாவட்டமாகவும் திகழ்கிறது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவ மாணவிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து சிறப்புகளையும் தெரிந்து கொண்டு அதனை போற்றிப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முகாமை திட்ட இயக்குனர் பால கணேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், ஓலைச்சுவடி காப்பாளர் பெருமாள், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தாளாளர் பாராட்டு மாவட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ள டிஸ்கவர் தஞ்சாவூர் சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Discover Thanjavur ,Training Camp ,Thalalara Prahati District ,Thanjavur ,Thanjavur Tourism Development Group ,Discover Thanjavur District ,Deepak Jacob ,Thanjavur Museum ,Special Training Camp ,Talulara Appreciation District ,
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்