×

கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்

சின்னமனூர், மே 19: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும்பொருட்டும் மற்றும் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுப்பதற்கு கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பொக்லைன் மூலம் கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்ந்துள்ளனர்.

The post கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Theni district ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்