×

காண்டாமிருக வண்டு தாக்குதல் விழிப்புணர்வு

கூடலூர், மே 19: தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதல் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தங்கியிருந்து பயிற்சிபெறுவதோடு, இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான தகவல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கூடலூரில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு, தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதல் குறித்தும், தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஆமணக்கு புண்ணாக்கு பொறி குறித்து மாணவி ரோஷன் ஷபிஹா விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் தென்னை விவசாயிகள், வேளாண்கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post காண்டாமிருக வண்டு தாக்குதல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Agriculture College ,Madurai Agricultural College ,Research Institute ,Kampam valley ,Dinakaran ,
× RELATED வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு