×

அலங்காநல்லூர் அருகே மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி

அலங்காநல்லூர், மே 19: அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் நடைபெற்றது. பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 20 நாட்களாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் அலங்காநல்லூர்ை, வாடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைச் செயலாளர்கள் வினோத்குமார், தங்கப்பாண்டியன் மாவட்ட செயலாளர் அகஸ்டின், புதுப்பட்டி கார்த்திகேயன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தோருக்கு நினைவு பரிசு வழங்கினர். இந்த முகாமில் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

The post அலங்காநல்லூர் அருகே மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Alankanallur ,A. Budhupatti ,PDS Sports Club ,Vadipatti ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு