×

கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்

கொள்ளிடம், மே 19: கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கிக்கிடந்த குப்பைகள் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் முக்கிய பகுதிகளில் குவியல் குவியல்களாக குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. குப்பைகளை கொட்டுவதற்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம் தேர்வு செய்ய முடியாததால், தினந்தோறும் குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாதக்கணக்கில் பல இடங்களில் குப்பை குவியல்கள் இருந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. கொள்ளிடம் அக்ரஹார தெரு பெருமாள் கோயில் அருகே மலைபோன்ற குப்பை குவியல் கிடந்ததால் சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதித்தது. இது குறித்த செய்தி நேற்று 18ம் தேதி தினகரனில் வெளியாயானது.

அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கோபாலசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் தர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் நேற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி லாரியில் ஏற்றி சென்று வெளியே கொட்டும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக இருந்த தினகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு கொள்ளிடம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kollid Agrahara Street ,Kollid ,Dhinakaran News Echo ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED திருச்சி கொள்ளிடம் பாலத்தின்...