×

சின்னதாராபுரம் அருகே மது விற்ற 2 பேர் கைது

க.பரமத்தி, மே 19: சின்னதாராபுரம் அருகே தென்னிலை ஆகிய இரு வெவ்வேறு காவல் நிலைய பகுதிகளில் மது பாட்டில் பதுக்கிய வழங்கில் இருவர் மீது அந்தந்த போலீசார் வழக்குபதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மற்றும் தென்னிலை ஆகிய வேவ்வேறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்தந்த பகுதி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அதில் சின்னதாராபுரம் அடுத்த ரெங்கபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் புஞ்சைதலையூர் கண்ணுசாமி(47) என்பவர் அப்பகுதியில் மது விற்பனைக்காக 5பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. இதே போல தென்னிலை அருகே கூடலூர் கிழக்கு பகுதியில் நடத்திய சோதனையில் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன்(55) மேற்கண்ட பகுதியில் 5பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. மேற்கண்டவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சின்னதாராபுரம் அருகே மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chinnadharapuram ,K. Paramathi ,Thennilai ,Karur district ,Dinakaran ,
× RELATED சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம்