×

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோத்தகிரி: பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலியானது. நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை நீலங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை புளியன் என்பவரின் தனியார் தோட்டங்களில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்கு முயன்றது. பழத்தை பறிப்பதற்காக அந்த யானை பலா மரத்தை முட்டி தள்ளியது. அப்போது மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. தகவலறிந்து வனத்துறையினர், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் விநியோகத்தை துண்டித்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோத்தகிரி கால்நடை உதவி மருத்துவர் ரேவதி ஆகியோர் இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் அந்த யானை 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை என்று தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Neelangadu ,Nilgiri District, Kunjapan ,Puliyan ,
× RELATED மலைகாய்கறி தோட்டத்திற்குள் மழைநீர்...