×

பஞ்சாப் கிங்சுக்கு ஜிதேஷ் கேப்டன்

பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 3வது கேப்டன் தலைமையில் விளையாட உள்ளது. முன்னதாக, ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக சாம் கரன் (இங்கிலாந்து) கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இங்கிலாந்து வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக நாடு திரும்புவதால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கரனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா பொறுப்பேற்க உள்ளார்.

The post பஞ்சாப் கிங்சுக்கு ஜிதேஷ் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Jidesh ,Punjab Kings ,Shikar Dhawan ,Sam Karan ,England ,IPL ,Jitesh ,Dinakaran ,
× RELATED 2வது இடம் யாருக்கு?: குறி வைக்கும் ஐதராபாத், ராஜஸ்தான்