×

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ திட்டம்: சச்சின் பைலட்

பாலசோர்: எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ முயற்சி செய்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் தொகுதியில் கடைசி கட்டமான ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஒன்றிய முன்னாள் அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் பாலசோர் தொகுதியில் நேற்று நடந்த பேரணியில் ஸ்ரீகாந்த் ஜெனாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய சச்சின் பைலட், “ பாஜவின் எதேச்சாதிகாரம் காரணமாக நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் வலுவிழந்து விட்டன. முக்கிய அரசியலமைப்புகளின் நம்பகத்தன்மை ஆபத்தில் உள்ளது. இரண்டு முதல்வர்களை சிறைக்கு அனுப்பியது. பழி வாங்கும் அரசியலை செய்யும் பாஜ, காங்கிரசின் வங்கி கணக்குகளை முடக்கி விட்டது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ நினைக்கிறது. பாஜ அரசை தூக்கியெறிய நாட்டு மக்கள் முடிவெடுத்து விட்டனர்” என்று குற்றம்சாட்டினார்.

The post எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ திட்டம்: சச்சின் பைலட் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,India ,Sachin Pilot ,Balasore ,Congress ,Odisha ,Former ,Union Minister ,Srikanth Jena ,
× RELATED வட இந்தியாவில் 95 இடங்கள் பறிபோகும்; பாஜ...