×

சேகோ ஆலையில் பணியாற்றிய வடமாநில வாலிபர் திடீர் மாயம்

சேலம், மே 19: சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூரை சேர்ந்தவர் பூபதி (47). இவர் தலைவாசல் நத்தகரை அருகே சேகோ பேக்டரியை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பேக்டரியில் வேலை செய்வதற்காக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் வந்தனர். இங்கு சட்டீஸ்கர் மாநிலம் கொண்டங்கன் மாவட்டத்தை சேர்ந்த பரத்ராம்மார்கம் (23) பணி செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி இரவு பரத்ராம்மார்கம் நண்பர்களுடன் தூங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பரத்ராம்மார்கம் காணாமல் போனது ெதரியவந்தது. இதையடுத்து அவரது நண்பர்கள், பெற்றோர் வீட்டுக்கு போன் செய்து கேட்டனர். ஆனால் அவர் அங்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பூபதி தலைவாசல் போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்ராம்மார்கமை தேடி வருகின்றனர்.

The post சேகோ ஆலையில் பணியாற்றிய வடமாநில வாலிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : North State ,Sago ,Salem ,Bhupathi ,Kengavalli Madhulur ,Salem district ,Thalivasal Nattakarai ,Chhattisgarh ,
× RELATED கஞ்சா விற்று வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது