×

இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோர காவல் படையினர், ரோந்து கப்பல் வைபவ்-வில் நேற்று காலை ரோந்த சென்றபோது, கன்னியாகுமரியில் இருந்து தென் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இலங்கையைச் சேர்ந்த திர்ட்டி ‘மகா-6’ என்ற இலங்கை மீன்பிடி படகை சுற்றிவளைத்தனர். அதில் வந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இன்று மதியம் தூத்துக்குடி அழைத்து வரும் கடலோர காவல் படையினர், தருவைகுளம் மரைன் போலீசில் ஒப்படைக்கின்றனர். ஒன்றிய, மாநில உளவுத்துறையினர் விசாரணைக்குப் பிறகு ராமநாதபுரம் கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள். இதனிடையே நாகை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான இலங்கை மீனவர்கள் 14 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Coast Guard ,Kanyakumari ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது