×

நடுவானில் கோளாறு பெங்களூரு விமானம் திருச்சியில் தரையிறக்கம்

திருச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 143 பயணிகளுடன் ஒரு விமானம் நேற்று புறப்பட்டது. இதில் 143 பயணிகள் மற்றும் விமானிகள், பணி பெண்கள் உள்பட 167 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, காற்றழுத்தக் குறைபாடு காரணமாக இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மதியம் 1.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. உடனே விமான நிலைய அதிகாரிகள் துணையோடு பயணிகள் அனைவரும் பத்திரமாக திருச்சியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் மாலை 5 மணிக்கு 143 பயணிகளும் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post நடுவானில் கோளாறு பெங்களூரு விமானம் திருச்சியில் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Trichy ,Thiruvananthapuram ,
× RELATED முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்