×

தப்பிய பெண் கைதி 2 மணி நேரத்தில் பிடித்தது போலீஸ்

மதுரை: மதுரையில் ஏடிஎம் சென்டர்களில் பணம் எடுக்க வரும் முதியவர்கள், பெண்களை குறிவைத்து உதவுவதுபோல் நடித்து அவர்களுக்கு தொியாமல் பின் நம்பரை வைத்து பணத்தை திருடிய தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தமணிமேகலை (26) என்பவரை போலீசா கைது செய்து, மதுரை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் மதுரை பெண்கள் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
சிறைக்குள் அடைப்பதற்கு முன்பாக 3 மணியளவில் பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற மணிமேகலை திடீரென தப்பினார். பல பகுதிகளிலும் தீவிரமாக தேடிய போலீசார், 2 மணி நேரத்தில் திருமங்கலத்தில் பதுங்கியிருந்த மணிமேகலையை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தப்பிய பெண் கைதி 2 மணி நேரத்தில் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Manimekalai ,Kondamanayakanpatti ,Andipatti, Theni district ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...