×

ஆந்திராவில் இருந்து தேனிக்கு திருட்டு காரில் கடத்திய 130 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

பெரம்பலூர்: கேரளாவில் திருடிய காரில், ஆந்திராவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு, வல்லாபுரம் பிரிவு ரோடு எதிரே நேற்று நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அஸ்கர், 3 மாதங்களுக்கு முன்பு தனது கார் காணாமல் போனதாகவும், கடந்த 17ம் தேதி இரவு செங்கல்பட்டுக்கு அருகே காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி செயல்பட்டதாகவும் அந்த கார் திருச்சிக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட நம்பர் காரை போலீசார் பார்த்ததும், அதிலிருந்து 6 பேர் இறங்கி தப்பி ஓடினர்.

அதில் 3 பேரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிப்பிடித்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஆணைப்பட்டியை சேர்ந்த தெய்வம் மகன்கள் அஜித்(28), மதன் (27), மணிகண்டன் மகன் பாலா (28) என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த காரில் 130 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கம்பத்தை சேர்ந்த பிரதீபன் என்கிற வெள்ளையன்(25), மனோஜ்(26) ஆகிய இருவரை தனிப்படையினர் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கார்கோடா பகுதியிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சாவை காரில் கடத்தியதும், கேரளாவை சேர்ந்த அஸ்வின் காரை திருடி கடத்தலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post ஆந்திராவில் இருந்து தேனிக்கு திருட்டு காரில் கடத்திய 130 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Theni ,Perambalur ,Kerala ,Perambalur District Mangalamedu ,Vallapuram Division Road ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு