×

49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாடு முழுவதும் 543 இடங்களுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை, 4 கட்டமாக 23 மாநிலங்களில் 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்ளில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதற்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 5ம் கட்ட தேர்தலில் உபியில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாரில் 5, ஒடிசாவில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1, ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உபியின் ரேபரேலி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அமேதி (உபி), ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லக்னோ (உபி), லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானின் ஹாஜிபூர் (பீகார்), லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யாவின் சரண் (பீகார்), ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் மும்பை (மகாராஷ்டிரா), உமர் அப்துல்லாவின் பாரமுல்லா (ஜம்மு காஷ்மீர்), மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே போட்டியிடும் கல்யாண் ஆகியவை விஐபி தொகுதிகளாக உள்ளன. 5ம் கட்ட தேர்தலுடன் மகாராஷ்டிரா (மொத்தம் 48 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (5), லடாக் (1) ஆகிய இடங்களில் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது.

The post 49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Maharashtra ,Uttar Pradesh ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...