×

சென்னையில் திருடு போன டூவீலருக்கு ஒட்டன்சத்திரத்தில் அபராதம் விதிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அதிவேகமாக ஓட்டி சென்றதாக சென்னையில் திருடு போன டூவீலருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் வண்டலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு வண்டலூர் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்திருந்த இவரது டூவீலர் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து ரியாஸ் அகமது அளித்த புகாரில் வண்டலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் வாலிபர் ஒருவர் டூவீலரில் அதிவேகமாக சென்றுள்ளார்.

இதை கண்ட போலீசார் அவரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் செல்லவே போலீசார், அந்த டூவீலரின் எண்ணை வைத்து ரூ.3,000 அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த எஸ்எம்எஸ் டூவீலர் உரிமையாளர் ரியாஸ் முகமதுவின் மொபைல் எண்ணுக்கு சென்றுள்ளது. இதையடுத்து ரியாஸ் அகமது வண்டலூர் காவல் நிலையத்தில் காணாமல் போன டூவீலருக்கு அபராதம் விதித்துள்ளனரே என கேட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட டூவீலரின் உதிரி பாகங்களை மாற்றி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அந்த வாலிபர் சுற்றி வருவது தெரியவந்தது. ரியாஸ் அகமது அளித்த புகாரின்படி ஒட்டன்சத்திரம் போலீசார், அந்த டூவீலரை தேடி வருகின்றனர்.

The post சென்னையில் திருடு போன டூவீலருக்கு ஒட்டன்சத்திரத்தில் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Otanchatra ,Ottanchatram ,Riyaz Ahmed ,Kunradur, Chennai ,Vandalur ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்