×

பொன்னமராவதி பகுதியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

பொன்னமராவதி, மே 19: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தினை நம்பி வாழும் பகுதி இங்கு விளையும் நெல்லை விற்பதிற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அதன் மூலம் நெல் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்தனர். இதன் பயனாக சடையம்பட்டி, ஆலவயல், அரசமலை ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் எடுக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் அரசு நிர்ணயத்த விலைக்கு நெல்லை விற்பனை செய்தனர். ஆனால் அந்த நெல்கொள்முதல்நிலையங்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமே செயல்பட்டது. அதன் பின்னர் மூடப்பட்டது. இதன் பின்னர் நெல் அறுவடை செய்து விற்பனைக்கு வைத்துள்ள விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படுகின்றது.. உழவுக்கு ஆள்கிடைக்காமல், வரப்பு வெட்ட, நெல் நடவு செய்யவும், களை எடுப்பதற்கும், அறுவடை செய்யவும் கூலி ஆட்கள் கிடைக்காமலும், அடித்த நெல்லை தூற்ற, மூடை கட்ட ஆள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதேபோல் அதிக செலவு செய்து நெல் சாகுபடி செய்து அறுவடை செய்து போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிரந்தராமக பொன்னமராவதி பகுதியில் 4 இடங்களில் நெல் கொள்முதல்நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post பொன்னமராவதி பகுதியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...