×

பாஜ 200 சீட்களை கூட தாண்டாது; இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி

கோகாட்: மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஆரம்பாக் மக்களவை தொகுதிகுட்பட்ட கோகாட்டில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதேச்சாதிகார, மோடி அரசை எதிர்த்து போராடுகிறோம்.

இந்த அணிக்கு இந்தியா என்ற பெயரை நான்தான் வைத்தேன். 2024 மக்களவை தேர்தலில் பாஜ 200 இடங்களை கூட தாண்டாது. இப்போது 400 நம் இலக்கு என்று பேசி வரும் மோடி தேர்தல் முடிவுக்குபின் ஏற்கனவே சுவரில் எழுதப்பட்ட வாசகத்தைதான் படிக்க முடியும். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பங்காற்றும்” என்று தெரிவித்தார்.

The post பாஜ 200 சீட்களை கூட தாண்டாது; இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,West Bengal ,Chief Minister ,Mamata ,Kogat ,Mamata Banerjee ,Lok ,Sabha ,Arambak Lok Sabha ,CM ,Dinakaran ,
× RELATED சர்ச்சை விளம்பரங்கள் விவகாரத்தில் பாஜ மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி