×

மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் மொத்த இடங்களை நிரப்ப வேண்டும்

சென்னை: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அரசு உண்டு, உறைவிட பள்ளிகளில் மட்டும் தேர்வு எழுதிய 1245 மாணவர்களில் 1171 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கான இடங்கள் 1200 தான், அதிலும் பல பாடப்பிரிவுகளில் 50 இடங்களுக்கு மேல் இருந்தால் 1 இடம் பழங்குடியினத்தவருக்கு கிடைக்கும். இதற்கு குறைவாக இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் பழங்குடி மாணவர் சேரமுடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அளவில் பழங்குடியினத்தவருக்குரிய மொத்த இடங்களும் நிரப்பப்படுவதும் அவசியம். கூடுதலான எண்ணிக்கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் அரசு தேவையான நடவடிக்ககைளை எடுக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு முன்வர வேண்டும்.

The post மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் மொத்த இடங்களை நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Hill People's Association ,CHENNAI ,State Vice President ,P. Shanmugam ,Tamil Nadu Hill People's Association ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...