×

தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு

தென்காசி: தென்காசி,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தான். குற்றாலத்திற்கு குளிக்க சென்ற போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்படுத்தியது.

தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராக உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில், குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய இரு அருவிகளை வனத்துறை கட்டுப்பாட்டில் விட தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏனைய இரு அருவிகளையும் தற்போது வனத்துறை நிர்வாகத்தின் கீழ் விட பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Tenkasi District Administration ,Maine Crime ,Forest Department ,TENKASI ,KALAM ARUVI ,TENKASI, WEST CONTINUATION MOUNTAINS ,Dinakaran ,
× RELATED பழைய குற்றாலம், மெயின் குற்றாலம்,...