×

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்


திருத்தணி: கனகம்மாசத்திரம் அருகே இன்று காலை சாலையோரத்தில் இருந்த நூறாண்டு பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு பெயர்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் முதல் திருவாலங்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், முத்துகொண்டாபுரம் அருகே சாலையோரத்தில் சுமார் நூறாண்டு பழமையான புளியமரம் காய்ந்த நிலையில் பலவீனமாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை சாலையோரத்தில் இருந்த நூறாண்டு பழமையான புளியமரம் திடீரென வேரோடு பெயர்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், திடீரென புளியமரம் முறிந்து விழுவதை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டனர்.

இதனால் பலத்த உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும் திருத்தணி உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் விழுந்து கிடந்த பழமையான புளியமரத்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றி, அங்கு போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், அங்கு காய்ந்த புளியமரத்தை மின் அரவை இயந்திரம் மூலமாக துண்டு துண்டாக வெட்டி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Centennial Plum ,Kanagammasatram Road ,THIRUTHANI ,KANAGAMMASATRAM ,Kanagammasathram ,Thiruvalangadu ,Centennial Plum Tree ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி