×

மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!

சென்னை : விடியல் பயணம் திட்டத்தினால் பேருந்தில் பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மார்ச் மாதத்தில் மட்டுமே தினசரி 55 லட்சம் பெண்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணித்ததாக தெரிவித்துள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்து இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே தினசரி சராசரியாக 55 லட்சம் பெண்கள் விடியல் பயணம் மூலமாக பயன்பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 49 லட்சம் பெண்கள் பயணித்து இருக்கிறார்கள்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த மே 9 வரை 468 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மாநகர பேருந்துகளில் தினசரி 1.76 கோடி பேர் பயணித்தது புதிய மைல் கல் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில், இலவச பெருந்து திட்டம் மூலம் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் பயன் தருவதாகவும் இதனால் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமித்து, அதனை வைத்து அவர்கள் விலையேற்றத்தை சமாளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை பயன்படுத்துவோரில் 60% பேர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் 80% பேர் எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Dimuka ,Government of Tamil Nadu! ,
× RELATED கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும்...