×

நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளது. வரும் 31ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

எல்லை தாண்டி வந்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. நாகை கோடியக்கரை அருகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் அவர்கள் 14 பேரும் ஒப்படைக்க இருக்கிறார்கள்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. மேலும் அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்வதால் தமிழக மீனவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு இதற்கு நிரந்தர தீர்வை காணுமாறு வலியுறுத்தி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இதேபோல் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையாலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் 5 படகுகளில் எல்லை தாண்டி வந்ததாக இந்திய கடற்படை கைது செய்துள்ளது. நாகை கோடியக்கரை அருகே கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்தது. 5 படகுகளில் வந்த அவர்களை இந்திய கடற்படை கைது செய்து நாகை துறைமுகதுக்கு அழைத்து வந்துள்ளனர்.

கைதான 14 பேரும் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் ஒப்படைக்க இருக்கிறார்கள். இதன்பிறகே அவர்கள் மீனவர்கள் தானா என்றும், இல்லை அகதிகளாக இந்தியா வந்து இருக்கிறார்களா அல்லது திசை மாறி இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார்களா? என்பது முதல் கட்ட விசாரணைக்கு பிறகே தெரியும்.

இந்நிலையில்  நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளது. வரும் 31ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Puzhal Jail ,Chennai ,Indian Coast Guard ,Puzhal Jail, Chennai ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் புழல் சிறையில் அடைப்பு!!