×

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் புழல் சிறையில் அடைப்பு!!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் நாகை அருகே இந்திய கடலோர காவல் படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் நாகை வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்கள் 14 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்ற தலைமை மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து 14 பேரும் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் புழல் சிறையில் அடைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,CHENNAI ,Indian Coast Guard ,Nagai ,
× RELATED நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14...