டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. ஸ்வாதி மலிவாலின் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அம்பலப்படுத்துகிறது என ஆம் ஆத்மி பதிவு செய்துள்ளது. ஸ்வாதி மலிவாலை பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கெஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாக ஸ்வாதி நிமலிவால் குற்றஞ்சாட்டிய நிலையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே நடந்ததைப் பற்றி மலிவால் விவரிப்பது போலும் வீடியோ உள்ளது.
The post ஸ்வாதி மலிவால் விவகாரம்: ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு appeared first on Dinakaran.