×

மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு

சென்னை: மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும், கனமழை பெய்யும் போது இடைவெளி விட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளை சாலை ஓரத்தில் இயக்கக் கூடாது: போக்குவரத்து துறை செயலாளர் பணிந்திரரெட்டி உத்தரவு அளித்துள்ளார்.

* பேருந்து இயக்கம்

மழைவெள்ளம். சூறாவளி காலத்தில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான என்ணிக்கையிலான பேருந்துகளை இயக்க தயார் தியையில் இருக்க வேண்டும். கன மழையின் போது பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களும் கிளை மேலாளர்கள். இயக்க மேலாளர்கள். பேருந்து நிலைய பொறுப்பாளர்கள். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துவர்களுக்கு சுற்றறிக்கையின் மூலம் தக்க அறிவுரைகளை வழங்கி. அதனை பணியாளர்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடத்தில் பணியளர்கள் செயல்பாடுகளை அலுவலர்கள் மூலம் கண்கணிக்கப்பட வேண்டும்.

கனமழை பெய்யும் போது பேருந்தை மிகவும் கவணமாக போதிய இடைவெளிவிட்டும் இயக்க வேண்டும். சலையின் இடது புறம் பேருந்தை இயக்கும் போது சாலைலை விட்டு அதிக ஓரத்தில் செல்லாமல் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும். சலையில் மின் கம்பி ஏதேனும் அறுந்து விழுந்துள்ளதா மரங்கள் விழுந்துள்ளதன என கவனித்து இயக்க வேண்டும்.

சாலைகளில் மழைநீர், தாழ்வான பாலங்கள் மதகுகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றைக் கடக்கும் போது கவனமாக பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட வேண்டும். சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது போல் தெரிந்தால் சுரங்கப்பாதைகளை பயன்படுத்த வேண்டாம். மேலும், போக்குவரத்து மாற்றுப்பாதைகள், வழுக்கும் சாலைகள் போன்றவற்றின் வழியாக இயக்கும் போது மிகுந்த எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சூறாவளி. கனமழை, வெள்ளம் போன்ற அரசு அறிவிக்கும், முன்னறிவிப்பு நிலைமைகளுக்கு ஏற்ப வாகன இயக்கத்தைத் திட்டமிட்டு இயக்கப்பட வேண்டும். குறிப்பாக கடலோரப்பகுதிகளின் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் ஓட்டுநர்கள். வானிலை ஆய்வுமைய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் எதிர் கொள்ளும் வகையில், அனைத்து Wrecker & Break Down Vans களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* கனமழை காலங்களில் பேருந்து பாரமரிப்பு

அனைத்துப் பேருந்துகளில் Wiper Motor and Blade, ஜன்னல் கண்ணாடிகள். கூரையில் கசிவு, இருக்கை, மெத்தை / உறை, உடைந்த இருக்கை. ஓட்டுநர் பகுதியில் உள்ள ஜன்னல்களில் உள்ள குறைகளை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போதுமான அளவில் இருப்புகள் பராமரிக்கப்பட வேண்டும்.

டாப் வெண்டிலேட்டர்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் முகப்பு விளக்கு (Head Light) பிரகாசமாக எரியும் வண்ணம் இருக்க வேண்டும். அனைத்து Head Light-களிலும் Head Light ring பொருத்தப்பட்டிருக்க வேண்டும். Head light-ன் உள்புறம் உள்ள ஒளிரும் தன்மை உள்ள இடங்களில் சேதமடைந்து இருந்தால் உடனடியாக Head Light Doom மாற்றம் செய்யவேண்டும்.

அனைத்து wheelகளிலும் உள்ள Wheel Nuts Tight-ஆக உள்ளதையும் மற்றும் அனைத்து டயர்களில் உள்ள காற்றழுத்தம் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

பணிமனைகளின் முக்கியமான இடங்கள், அலுவலகங்கள், பாதுகாப்புப் பிரிவு மற்றும் பணம் மற்றும் பயணச்சீட்டு பிரிவுகள் பணிமனைகள் போன்ற இடங்களில் மின்வெட்டு ஏற்படும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசர விளக்குகள் / தடையில்லாத மின்சார வினியோகங்கள் (UPS) உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், அனைத்து பணிமனைகள், அலுவலகங்கள், பணிமனைகளின் வளாகங்களில் மின் வெட்டு ஏற்பட்டால் நிலைமையை நிர்வகிக்க ஜெனரேட்டர்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து பணிமனைகள், அலுவலகங்கள், பணிமனைகளின் வளாகங்களில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரை அமைப்பு, பக்கவாட்டுசுவர். காம்பவுண்ட்சுவர் போன்றவற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து நல்ல நிலையில் பராமரித்து வைத்திருக்கவேண்டும்.

பணிமனை வளாகத்தில் மழைநீர் வடியும் பாதையில் எவ்வித அடைப்பும் இல்லாதவாறு இருக்வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் டயர் மற்றும் பேரல்கள் உள்ளிட்ட பொருட்களில் மழை நீர் தேங்கா வண்ணம் பிளாஸ்டிக் அல்லது தார்ப்பாய்களைக் கொண்டு மூடி பராமரிக்க வேண்டும்.

மின்சார வயர்கள். Main Box. Switch Board-கள் மழைநீர் படாவண்ணம் பாதுகாப்பான Insulation-டன், மழைநீர் கசிவு இல்லாதவாறு இருப்பதை உறுதி செயதிட வேண்டும். மின்சேவை இணைப்பு மின்சாதனங்களை மின்னியல் பணியாளர்கள் கையாளும் பொழுது எச்சரிக்கையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த கேட்டு கொள்ளப்படுகிறது.

கட்டிடங்கள் மீது மழை தண்ணீர் தேங்காதவாறு சுத்தம் செய்திட வேண்டும்.செடி மற்றும் கொடிகள் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். தொற்று நோய்களை தவிர்க்க, குடிநீர் ஆதாரமாக இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக வைத்து மூடியிருப்பதை உறுதி செய்யவேண்டும். அனைத்து அலுவலகங்கள், பணிமனைகள் போன்றவற்றின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பணிமனைகளின் உள்ள டீசல் பங்க் வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், மழைக்காலங்களில் பேருத்துகளுக்கு டீசல் பிடிக்கும் முன் Dip rod-ல் Water Paste போட்டு ஆய்வு செய்து தண்ணீர் கலக்கவில்லை என்று உறுதிபடுத்திய பிறகு பேருந்துகளுக்கு டீசல் பிடிக்க வேண்டும். இதனை மேற்பார்வையாளர்கள் உறுதிப்படுத்தவேண்டும்.
பணிமனைகளின் உள்ள டீசல் பங்க்-ல் டீசல் Unload Pipe மற்றும் Dip rod holder pipe ஆகியவற்றை மழைநீர் புகாமல் இருக்க பிளாஸ்டிக் கவரால் மூடவேண்டும்.

* தகவல் தொடர்பு

பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலைகளின் போது தகவல்களை தெரிவிப்பதற்காக, மண்டல அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தனியாக அவசர தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி. 24 மணி நேரமும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பேருந்து நிலையத்தில், பயணிகளின் புகார்களை பதிவிட்டு சரி செய்தல் மற்றும் தினாரி பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சமூகவலைத்தளம். தொலைபேசி. மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யவதை உறுதி செய்யவேண்டும்.

அனைத்து பேருந்துகளிலும், அவசர தொடர்புக்கு கிளையின் தொலைபேசி எண் மற்றும் ஒருங்கிணைந்த பயணிகள் குறை / புகார் அளிக்கும் உதவி எண் 149 பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். கனமழை, வெள்ளம் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளின் போதுபாதிக்கப்பட்ட பொதுமக்களை மாற்றுவது மற்றும் மீட்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மூலம் வரும் அழைப்பிற்கும் பதிலளிக்கவும், பணியாளர்களுடன் உதிரி பேருந்துகள் இயக்கத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

அனைத்து மேலாண் இயக்குநர்கள், மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இக்கடிதம் கிடைக்கப் பெற்றதற்கான ஒப்புதலினையும் மற்றும் தாங்கள் இது குறித்து எடுத்த நடவடிக்கைகளையும் அறிக்கையாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of ,Transport ,Chennai ,Department ,Vindraretti ,Transport Department ,Dinakaran ,
× RELATED வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை