×

தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு..!!

தென்காசி: தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய அருவி, பிரதான அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் பழைய அருவி, பிரதான அருவி இருப்பதால் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளது. ஐந்தருவி ஏற்கெனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் வன காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi Courtalam ,Tenkasi ,Public Works Department ,Forest Department ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி