×

சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு..!!

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தேனியில் உள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 126.28 அடி கொள்ளளவு கொண்ட சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.12 அடியில் இருந்து 120.37 அடியாக அதிகரித்துள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்து 44 அடியில் இருந்து 46 அடியாக அதிகரித்துள்ளது.

The post சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sothupparai ,Manchalaru dam ,Theni ,Chothupparai ,Manchalaru ,Sothupparai dam ,Dinakaran ,
× RELATED மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி