×

முத்துப்பேட்டை வார சந்தை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

 

முத்துப்பேட்டை, மே 18: முத்துப்பேட்டை பேரூராட்சி 6-வது வார்டு புதுக்காளியமான் கோயில் தெரு வார சந்தை சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியதால் மக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தினகரனின் செய்தி வெளியிட்டப்பட்டது இதன் எதிரொலியாக சமீபத்தில் சாலையை சீரமைத்து புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

இதனால் இந்த சாலை மட்டம் உயர்ந்தது இதன் காரணமாக இந்த சாலையிலிருந்து பிரிந்து செல்லும் டாக்டர் மீரா உசேன் சாலை தாழ்வாக மாறியது இதனால் சில தினங்களாக இப்பகுதி பெய்யும் மழைநீர் இந்த தாழ்வான பகுதியில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன் அங்கு குளம்போல் தேங்கியபின் அதிகளவில் மழைநீர் நிறையும்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதேபோல் பல நாட்கள் தேங்கும் இந்த மழைநீர் கழிவு நீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய்களை பரப்பி வருகிறது. அதனால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகையில் இனி மழைநீர் தேங்காத வகையில் உடனடியாக இந்த தாழ்வான சாலைக்கு மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும் அதேபோல் தாழ்வாக உள்ள இந்த சாலையை உயர்த்தி சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை வார சந்தை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Muthupettai Week Market ,Muthuppet ,Muthupet Municipality 6th Ward Pudukaliaman Koil Street Week Market Road ,Dinakaran ,Muthupettai market ,
× RELATED நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில்...