×

ஜெயங்கொண்டம் அருகே பிறந்தநாளை கேக் வெட்டி ரோட்டில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு

 

ஜெயங்கொண்டம், மே18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சிவா என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாடும் விதமாக இலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (24) செல்வம் (25)ஆனந்த் (25) வீரப்பன் (24) உள்ளிட்டோர் பொதுவெளியில் அலப்பறை செய்து வாகனத்தில் ஊர்வலமாக சென்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்தவாறு சூரியமணல் கிராமத்திற்கு சென்றுள்ளனர்..

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் செங்குந்தபுரம் பகுதியில் இடையில் வழிமறித்து ஐயப்பன், செல்வம், ஆனந்த், வீரப்பன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது போல் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள், சாலையில் அலப்பறையில் ஈடுபடுபவர்கள், கூட்டம் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டு ரோட்டில் நடுவே நிற்போர்கள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ஜெயங்கொண்டம் அருகே பிறந்தநாளை கேக் வெட்டி ரோட்டில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Aiyappan ,Selvam ,Anand ,Veerappan ,Ilyur village ,Siva ,Suriyamanal ,Ariyalur district ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...