×

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்நாள் மழை இரண்டாம் நாள் பனி: பொதுமக்கள் திகைப்பு

 

பெரம்பலூர்,மே18: பெரம் பலூர் மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் 13ம் தேதி இரவு லேசான மழைத் தூறல் காணப்பட்டது. அதே போல் 15ம் தேதி நள்ளிரவு முதல் 16ம் தேதி காலை 10மணி வரை மாவட்ட அளவில் பரவலாக தூரல் மழை பொழிந்தது. இது மாவட்ட அளவில் 77 மிமீ என பதிவாகி இருந்தது. சராசரி மழை அளவு 7மிமீ ஆகும்.

இதனால் தொடர்ந்து மழை பொழியும் என எதிர் பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் திகைப்பையும் அளிக்கின்ற விதமாக நேற்று அதிகாலை 1 மணிமுதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மாநில,தேசிய நெடுஞ்சாலைகளில் புகைமூட்டம் போல் காணப் பட்டது. இதனால் மழைப்பொழிவு குறைந்து மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ என மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்நாள் மழை இரண்டாம் நாள் பனி: பொதுமக்கள் திகைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம்