×

பட்டாசு மூலப்பொருள் 14 மூட்டை பறிமுதல்: 2 பேர் கைது

 

விருதுநகர், மே 18: விருதுநகர் அருகே பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டி புதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரின் விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வேனில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மூடை, மூடையாக இருப்பதாக நாட்டார்மங்கலம் கிராம உதவியாளர் சுப்புலட்சுமிக்கு தகவல் வந்துள்ளது.

அதை தொடர்ந்து விஏஓ லதா, கிராம உதவியாளர் சுப்புலட்சுமி இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வேனில் பலரக வெடிகளை தயார் செய்ய பயன்படுத்தப்படும் தூக்குமணி மருந்து இரண்டரை மூட்டைகள், காரி தூசி 3 மூட்டைகள், அலசாத கரிதூசி 1 மூட்டை, 2 பசைமூட்டைகள், சல்லடை 2, முக்காலி 4 ஆகிய மூலப்பொருட்கள் இருந்துள்ளது.

விசாரணையில் மருதநத்தம் கிராமத்தில் உள்ள பயர் ஆபீசில் வேலை செய்யும் ராமலிங்காபுரத்தை சேர்ந்த கண்ணன், அம்மன்கோவில்பட்டி மாரிச்செல்வம் இருவரும் வேனை கொண்டு வந்து நிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆமத்தூர் போலீசில் விஏஓ லதா புகாரில் கண்ணன்(39), மாரிச்செல்வம்(24) இருவரையும் கைது செய்து பட்டாசு மூலப்பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பட்டாசு மூலப்பொருள் 14 மூட்டை பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sundaram ,Ammankovilpatti Pudur ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...