×

தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு

விருதுநகர், மே 18: விருதுநகர் பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். நெடுஞ்சாலைத்துறையின் விருதுநகர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உட்கோட்டங்களில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலங்கள் கட்டுமானப்பணிகள் உள்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆமத்தூர்-லட்சுமியாபுரம் சாலை 5 கி.மீ தூரம் ரூ.5.40 கோடியில் அகலப்படுத்துதல், சாத்தூர்-சிவகாசி-கழுகுமலை சாலையில் ரூ.1.30 கோடியில் சிறுபாலம் கட்டுதல், தென்காசி-திருமங்கலம் சாலை முதல் சொக்கநாதன்புத்தூர் சாலை 4.8 கி.மீ தூரம் ரூ.5.20 கோடியில் அகலப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில் தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது விருதுநகர் கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Division ,Highways Department ,Sivakasi ,Rajapalayam ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...