×

சாயல்குடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மின்மீட்டர்களை இடமாற்ற கோரிக்கை

சாயல்குடி, மே 18: சாயல்குடி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ள மீட்டர்கள், பீஸ் கேரியர்களை மாற்றி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அண்ணாநகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு 92 வீடுகள் கட்டப்பட்டது. இங்கு தற்போது ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கீழ்தளத்தில் வீடுகளுக்கான மின் மீட்டர்கள், பீஸ் கேரியர்கள் உள்ளிட்ட மின்சப்ளை சாதனங்கள் உள்ளன.

இவை குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் திறந்த வெளியில் இருப்பதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சாதன பொருட்களை மாற்றியமைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், “குடியிருப்பு வீடுகளின் கீழ்தளத்தில் வாசல் நுழைவு பகுதிகளில் ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட மின்சப்ளைக்கான மீட்டர், மின்சாதன பொருட்கள் குழந்தைகளுக்கு தொட்டுவிடும் உயரத்தில் இருப்பதால் விளையாடும் போது இடித்துவிடும், தொட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே மின்சாதனங்களை பாதுகாப்பாக மாற்று இடத்தில் வைக்க வேண்டும்’’ என்றனர்.

 

The post சாயல்குடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மின்மீட்டர்களை இடமாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sayalkudi Slum Replacement Board ,Chayalgudi ,Chayalgudi Slum Exchange Board ,Tamil Nadu Slum Replacement Board ,Sayalkudi Annanagar ,Dinakaran ,
× RELATED கடலாடியில் இரட்டை மாட்டுவண்டி...