×

11ம் வகுப்பு தேர்வில் சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

 

பெருந்துறை, மே 18: 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி த.பா.சிவரஞ்சனி 600க்கு 591 மதிபெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 99, ஆங்கிலம் 97, இயற்பியல் 100, வேதியியல் 97, உயிரியல் 99, கணிதம் 99. இதேபோல, க.லோ.கவிஷ் 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மோ.மோனிகா 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 156 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர் கணினி அறிவியல் 8 பேர், இயற்பியல் ஒருவர், பொருளியல் ஒருவர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும், சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் முத்துகருப்பன் மற்றும் இருபால் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

The post 11ம் வகுப்பு தேர்வில் சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennimalai Kongu School ,Perunthurai ,Sennimalai Kongu Velalar Matric Higher Secondary School ,T.P.Sivaranjani ,Dinakaran ,
× RELATED 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்...